Breaking News

சிகரெட்டுக்கான விலை சூத்திரம்


சிகரெட்டுகளுக்கான விலை சூத்திரமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக புகையிலை மற்றும் மதுபானங்கள் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் டொக்டர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதனை 2022 தொடக்கம் 2026 வரை அமல் படுத்த உத்தேசம் என்று தெருவித்த அவர், இதனூடாக வருடத்திற்கு ஒரு சிகரெட்டின் விலை 6 ரூபாவினால் அதிகரிக்கப்படும். 

கொழும்பில் நேற்று (8)இடம்பெற்ற ஊடக சந்திப்பில்  கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் விலை சூத்திரம் சுகாதார அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த விடயம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகரெட்டிற்கான வரிகளை அதிகரிக்க எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் குறித்த திட்டம் சேர்க்கப்படும் என எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்

No comments