சிவசிதம்பரத்தின் 29ஆவது நினைவு தினம்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தாமோதரம்பிள்ளை சிவசிதம்பரம் அவர்களின் நினைவு தினம் இன்று (09.11) காலை 9 மணியளவில் வவுனியா வைரப்புளியங்குளத்தில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபியில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும் வவுனியா பல்கலைக்கழகத்தின் மருத்துவருமான ப.சத்தியலிங்கம், வவுனியா நகரசபை உறுப்பினர் நா.சேனாதிராசா, முன்னாள் நகரசபை உறுப்பினர் ரி. கே. இராசலிங்கம், தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள், சமூக சேவையாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு அன்னாரின் திருவுருவச்சிலைக்கு மாலையிட்டு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
வவுனியா தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர்.தாமோதரம்பிள்ளை சிவசிதம்பரம் அவர்களின் நினைவான இச் சிலை நிறுவப்பெற்றுள்ளது. ஞாபகார்த்த சிலை அமைப்புக்குழுவினரதும் அதன் தலைவர் நா.சேனாதிராசா ஆகியோரதும் வேண்டுகோளுக்கிணங்க வவுனியாவின் மூத்த சட்டத்தரணி முருகேசு சிற்றப்பலம் அவர்களினால் கடந்த 2015ஆண்டு 07ம் மாதம் 25ம் திகதி இச் சிலை திறந்து வைக்கப்பட்டமை
No comments