வவுனியா தர்மலிங்கம் வீதியில் போக்குவரத்து பொலிசாரின் கடமை இல்லை. வாகன நெரிசலை கட்டுபடுத்தி தருமாறு கோரிக்கை
வவுனியா தர்மலிங்கம் வீதியில் போக்குவரத்து பொலிசாரின் கடமை இல்லை. வாகன நெரிசலை கட்டுபடுத்தி தருமாறு கோரிக்கை
வவுனியா தர்மலிங்கம் வீதியில் வாகனங்கள் வீதிகளில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அவ்வீதியூடான போக்குவரத்தில் நெரிசல் காணப்படுகின்றது . இப்பகுதியில் விபத்துக்களும் இடம்பெறுகின்றன . எனவே இவ்வீதியினுடனான போக்குவரத்தை சீரமைத்துத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
வவுனியா தர்மலிங்கம் வீதியானது கடைத் தொகுதிகள் அதிகமுள்ள பகுதியாகும் வியாபார வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத நிழல் தரிப்பிடங்கள் அகற்றப்படவில்லை மக்களின் எதிர்ப்புக்கள் வரும்போது நகரபையினால் அவ்வப்போது அகற்றப்படும் பின்னர் அந்நடவடிக்கை கைவிடப்பட்டுவிடும்.
எனவே இவ்வீதியால் பயணிக்க முடியவில்லை . வாகனங்கள் , முச்சக்கரவண்டிகள் , கனரக வாகனங்கள் அவ்விடத்தில் தரித்து காணப்படுகின்றது . கனரக வாகனங்கள் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக தரித்து நின்று பொருட்கள் இறக்கப்படுவதால் பாரிய வாகன நெரிசல்கள் காணப்படுகின்றது . இதனால் அவ்வீதிகளில் அடிக்கடி விபத்துக்களும் இடம்பெற்று வருகின்றன . போக்குவரத்துப் பொலிசார் அங்கு கடமையில் இல்லை .
இவ்வாறு பல்வேறு குறைபாடுகள் அங்கு காணப்படுகின்றன. எனவே இவ்வீதியுடனான போக்குவரத்தை சீரமைத்து மக்கள் பாதுகாப்புடன் பயணம் செய்வதற்கு வழியேற்படுத்தி தருமாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments