13 ஆவது திருத்த சட்டத்திற்கு எதிரான ஊர்தி வவுனியாவில் இருந்து புறப்பட்டது - காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் பங்கேற்பு
தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் 13 ஆவது திருத்த சட்டத்தினை நிராகரித்து எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ள போராட்டத்திற்கு வழிப்புணர்வை ஏற்படுத்தும் வாகன ஊர்தி இன்று வவுனியாவில் இருந்து முல்லைத்தீவை நோக்கி புறப்பட்டது.
காலை 10 மணிக்கு வவுனியா நகரசபையின் முன்பாகவுள்ள பொங்குதமிழ் தூபியில் காகாணமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கற்பூரம் ஏற்றப்பட்டு ஊர்தி பவனி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த ஊர்தி சென்ற போது விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டிருந்ததுடன் வவுனியா நகர் வழியாக ஊர்தி முல்லைத்தீவை நோக்கி சென்றது.
இதன் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.(Vavuniyan)
No comments