பேருந்து விபத்து - ஒருவர் பலி, 16 பேர் வைத்தியசாலையில் அனுமதி
ஹட்டன் – டிக்கோயா பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலை பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில்இ ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (28) காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் மேலும் 16 பேர் காயமடைந்து, டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். (Vavuniyan)
No comments