Breaking News

அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள ரி20 உலகக்கிண்ண தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு


அவுஸ்திரேலியாவில் இவ்வருடம் இடம்பெறவுள்ள ஆடவர் இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று (21) இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.  சுப்பர் - 12 சுற்றுக்கு நேரடி தகுதி பெறாத இலங்கை அணி, முதல் சுற்றில் நமீபியா, ஸ்கொட்லாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகளுடன் மோதவுள்ளது. 

இதற்கமைவாக, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள முதல் சுற்றின் முதலாவது போட்டியில் இலங்கை அணி, நமீபியா அணியை எதிர்கொள்ளவுள்ளது.  சுப்பர்-12 சுற்றின் முதல் போட்டி ஒக்டோபர் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இப்போட்டியில் நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய ஆகிய அணிகள் மோதவுள்ளன. 

மேலும், எதிர்வரும் ஒக்டோபர் 23ஆம் திகதி இடம்பெறவுள்ள போட்டியில், இந்திய அணி, பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments