வவுனியாவில் பொலிஸாரின் ஏற்பாட்டில் பாரிய சிரமதானம்
தமிழர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு வவுனியா பொலிஸாரின் ஏற்பாட்டில் பாரிய சிரமதானமொன்று நாளை முன்னெடுக்கப்படவுள்ளது.
வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக காலை 8 மணிக்கு பிரதி பொலிஸ்மா அதிபரினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ள குறித்த சிரமதானத்தில் வர்த்தகர்கள், அரச திணைக்களங்கள், சமூக ஆர்வலர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
குறித்த சிரமதானத்தில் பொதுமக்களையும் அதிகளவில் கலந்துகொண்டு எமது நகரை சுத்தமாக வைத்திருக்க உதவுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். (Vavuniyan)
No comments