Breaking News

வவுனியாவில் பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது.




உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வரும் நிலையில் வவுனியாவில் பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது.


வவுனியா நகரப்பகுதியில் அதிக சன நெரிசல் காணப்படுவதுடன் பொங்கலுக்கு தேவையான பானை, அகப்பை, கரும்பு, பட்டாசு, பழவகை என்பவற்றின் விற்பனை சூடு பிடித்துள்ளது. 

இதேவேளை, மட்பாண்ட பானைகளின் விற்பனை மிகக் குறைந்தளவிலேயே இடம்பெறவதாகவும், மக்கள் உலோகப் பானைகளையே அதிகம் வாங்குவதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.(Vavuniyan) 














No comments