வவுனியாவில் துகளாக்கும் இயந்திரம் கையளிப்பு!!
சேதன பசளை மற்றும் பீடைநாசி உற்பத்தி திட்டத்தின் கீழ் 35 பல் துகளாக்கும் இயந்திரங்கள் இன்று கையளிக்கப்பட்டது.
வவுனியா பிரதிமாகாண விவசாயத்திணைக்களத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் குறித்த இயந்திரங்களை பயனாளர்களுக்கு வழங்கி வைத்தார்.
குறித்த இயந்திரங்களில் 20 இயந்திரங்கள் பொதுமக்களுக்கும், வவுனியா நகரசபை , மற்றும் சிங்கள பிரதேசசபைக்கு தலா ஒரு இயந்திரமும் ஏனைய இயந்திரங்கள் இளைஞர் விவசாயக கழகங்களுக்கும் வழங்கிவைக்கப்பட்டது.
நிகழ்வில் பிரதிமாகாண விவசாய பணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
No comments