Breaking News

வவுனியாவில் யானையின் சடலம் மீட்பு!!!


வவுனியா குடாகச்சக்கொடி பகுதியில் உயிரிழந்த நிலையில் 30 வயதான யானையின் சடலம் ஒன்று மீட்கப்பட்டது.  

குறித்த கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் யானையின்  சடலம் ஒன்றினை அவதானித்த பொதுமக்கள் அது தொடர்பாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.  

சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிசார் வனயீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் தெரிவித்திருந்ததுடன், யானை இறந்தமைக்கான காரணம் தொடர்பாக  விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

சுமார்30 வயதுடைய 9 அடி உயரமான யானையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன்,  வடமாகாண வனயீவராசிகள் திணைக்களத்தை சேர்ந்த வைத்தியரால் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது. (Vavuniyan)






No comments