Breaking News

வவுனியா மாவட்ட உதைபந்தாட்டசங்கத்துக்கு போட்டியின்றி நிர்வாகத்தெரிவு!!


வவுனியா உதைபந்தாட்டசங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் நிர்வாகத்தெரிவும் வவுனியா கொறவப்பொத்தான வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்றது.


மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் கடந்த கூட்டத்தின் அறிக்கை வாசிக்கப்பட்டு சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதனை தொடர்ந்து புதிய நிர்வாகத்திற்கான தெரிவு இடம்பெற்றது.

அந்தவகையில் சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு ஏற்கனவே குறித்த பதவிகளை வகித்த மூவரும் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டனர்.

அந்தவகையில் தலைவராக எ.நாகராஜனும்   செயலாளராக எஸ்.சௌமியன், பொருளாளராக எம்.லரீப் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர். 

உபதலைவர்களா எம்.ஹமீம், ஐ.பரமநாதன், எஸ்.நந்தகேசன், பி.புலேந்திரன், உபசெயலாளர் (நிர்வாகம்) எம்.சுகந்தன், உபசெயலாளர் (சுற்றுப்போட்டி) எம்.இஸ்லாம், உப பொருளாளராக ஜி.பிரசாந், ஆகியோரும் நிர்வாகசபை உறுப்பினர்களாக ஐந்துபேரும் தெரிவுசெய்யப்பட்டனர்.

நிகழ்வில் இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தின் பிரதிசெயலாளர் தி.வரதராஜனும், காலிமாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தலைவர,ம ன்னார் பொலிஸ் அத்தியட்சகருமான டில்சான்நாகவத்த மற்றும் விளையாட்டு கழகங்களை சேர்ந்த அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்.





No comments