வவுனியாவில் சிறப்பாக கொண்டாடப்படும் தைப்பொங்கல்
அறுவடைப் பண்டிகையாம் தைப்பொங்கல் திருநாள் வவுனியாவிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
விவசாயத்தைக் தமது ஜீவனோபாயமாகக் கொண்டு வாழும் மக்கள் அதிகம் வாழும் வவுனியா மண்ணிலும் விவசாயிகள் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் முகமாக சூரியன் உதிக்கும் திசைநோக்கி வீட்டிலும் தமது தொழில் ஸ்தாபனங்களின் முற்றத்திலும், ஆலயங்களிலும், அரச மற்றும் தனியார் திணைக்களங்களுக்கு முன் பகுதியிலும் மாவிலைத் தோரணம் கட்டி கோலம் போட்டு, கலாச்சார ஆடைகள் அணிந்து புதுப்பானையில் பொங்கி பட்டாசு கொளுத்தி மகிழ்வதை அவதானிக்க முடிந்தது.
இவ்வருடம் விவசாயத்தில் எதிர்பாராத விதத்தில் பாரிய நஷ்டம் ஏற்பட்டிருந்தாலும் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் இம்முறை சூரிய பகவானை வேண்டி தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
No comments