வவுனியா பறங்கியாறு கிராமத்தில் பொங்கல்விழா
வவுனியா பறங்கியாறு கிராமத்தில் பொங்கல்விழா மற்றும் கலாசாரநிகழ்வு இன்று இடம்பெற்றது!!
கிராமத்தின் செயற்பாட்டாளர் ஜீவதீபா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதன்மை அதிதியாக சமூக ஆர்வலர் சந்திரகுமார் கண்ணன் கலந்துகொண்டார்.
நிகழ்வில் விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்றக்கப்பட்டதுடன், மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
விசேடமாக கலை,கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், பொதுநோக்குமண்டபம் பிரதம விருந்தினரால் நாடாவெட்டி திறந்துவைக்கப்பட்டது.
நிகழ்விற்கு தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பு அனுசரணை வழங்கியதுடன் கிராமசேவகர் கம்சிகன் அபிவிருத்தி உத்தியோகத்தர் த.சுபாயினி, கிராமமட்ட அமைப்புக்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.(Vavuniyan)
No comments