Breaking News

வவுனியாவில் ஏரிஎம்மில் பணத்தை திருடிய பெண்! கையும் மெய்யுமாக சிக்கினார்!!


வவுனியா வைத்தியசாலைக்கு அருகில் அமைந்துள்ள ஏரிஎம் இயந்திரத்தில் வேறொருவரின் பணத்தை திருடிய பெண் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.


குறித்த சம்பவம் இன்று காலை வவுனியாவில் இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் 

இன்று மதியம் வவுனியா வைத்தியசாலைக்கு அருகில் அமைந்துள்ள ஏரிஎம் இயந்திரத்திற்கு சென்ற பெண் ஒருவர் 17 ஆயிரம் ரூபாய் பணத்தினை எடுக்க முற்பட்டுள்ளார்.

இதன் போது இயந்திரத்தின் அறிவுறுத்தலை சரியாக அவதானிக்காத அவர் தனது அட்டையினை  மாத்திரம் மீளவும் பெற்றுக்கொண்டதுடன், பணத்தினை எடுக்காமல் சென்றுள்ளார். 

இதனை அருகிலிருந்து அவதானித்துக் கொண்டிருந்த மற்றொரு பெண் இயந்திரத்திலிருந்து வெளியில் வந்த 17 ரூபாய் பணத்தினை எடுத்து தனது பையினுள் மறைத்து வைத்துள்ளார்.

எனினும் குறித்த பணம் திருடப்பட்டுள்ள விடயம் அங்கிருந்தவர்களின் மூலம் பணத்தின் உரிமையாளருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

அத்துடன் பணத்தினை திருடிய பெண்ணை எச்சரித்த நிலையில் அவர் தானே அதனை திருடியதாக ஒப்புக்கொண்டதுடன், பணத்தினை உரிமையாளரிடம் மீளவும் வழங்கியிருந்தார்.(Vavuniyan) 

No comments