Breaking News

வவுனியாவில் இருளில் இருந்த ஆலயத்திற்கு ஒளிகொடுத்த நகரசபை தவிசாளர்.


வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் ஆலயத்தை சூழ்ந்த பகுதியில் நீண்டகாலமாக மின்விளக்கு இன்மையால் ஆலய பக்தர்கள், பொதுமக்கள்  பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். 

குறிப்பாக இப்பகுதி மக்கள் இவ்வீதியின் ஊடாக தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு செல்வதற்கு முக்கியமான வீதியாக காணப்படுகின்றது. 

மேலும் இது தொடர்பாக பலரிடமும் இதற்குரிய மின்விளக்கு அமைந்து தருமாறு கோரிக்கை விடப்பட்ட போதும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இதன்காரணமாக இவ்வீதியானது இருள் நிறைந்த இடமாக நீண்டகாலமாக காணப்பட்டதுடன்,  இரவுவேளைகளில் இவ்வீதியை பயன்படுத்த அச்சநிலைமையை ஏற்படுத்துவதாக இருந்தது. 

குறிப்பாக தற்போது ஆலய திருவிழா நடைபெற்றுவரும் நிலையில் பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிவருகின்றனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக  இப்பிரதேச இளைஞர்களினால் நகரசபை தவிசாளர் இ.கௌதமனின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர். 

இதனையடுத்து விரைந்து செயற்பட்ட நகரசபை தலைவர் இ.கௌதமன் ஆலயத்தினை சூழ்ந்த பகுதிகளில் மின்விளக்குகள் பொருத்துவதற்கான நடவடிக்கையினை எடுத்திருந்தார். 

இதன் மூலம் இப்பகுதி மக்கள் இரவு வேளைகளில் இப்பகுதியின் ஊடாக பயமின்றி பயணிக்கின்ற சூழல் தற்போது ஏற்பட்டுள்ளதுடன் ஆலய திருவிழாவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (Vavuniyan)



No comments