சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து க்றிஸ் மொரிஸ் ஓய்வு!
தென்னாபிரிக்க அணியின் சகலதுறை வீரரான க்றிஸ் மொரிஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
34 வயதான அவர் இறுதியாக 2019 உலகக் கிண்ண தொடரில் தென்னாபிரிக்கா அணி சார்பாக விளையாடினார்.
உள்நாட்டு அணியான டைட்டன்ஸ் அணியினன் பயிற்சியாளர் பதவியை ஏற்றுக்கொண்ட நிலையில் அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
தனது பயணத்தில் பெரியதாக இருந்தாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, அதில் பங்கு வகித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.(Vavuniyan)
No comments