ஒஸ்காரின் அதிகாரப்பூர்வ யூடியூப் தளத்தில் இடம்பிடித்த ஜெய்பீம் திரைப்படம்!
சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலமாக தயாரித்துள்ள ஜெய்பீம் திரைப்படம் குறித்த சில விடயங்கள் ஒஸ்காரின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி ஜெய் பீம் திரைப்படத்தின் காட்சிகளை படத்தின் இயக்குநர் ஞானவேல் விளக்கும் காட்சிகளே யூடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவில் வாழ்வில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட குறித்த திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றிப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.(Vavuniyan)
No comments