கொழும்பிற்கு தொழிலுக்கு சென்ற வவுனியா இளைஞன் மாயம்!!
வவுனியா நாகர்இலுப்பைக்குளம் பகுதியிலிருந்து கொழும்பிற்கு தொழில்நிமித்தம் சென்ற இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
வரவுனியா நாகர் இலுப்பைக்குளம் பகுதியை சேர்ந்த குறித்த இளைஞர் கடந்த மூன்றுமாதங்களாக கொழும்பில் தங்கியிருந்து தொழில் புரிந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 6 ஆம் திகதி வவுனியாவில் அமைந்துள்ள தனது வீட்டிற்குசெல்வதாக தனது நண்பர்களிடம் கூறியவிட்டு புறப்பட்டுள்ளார். இதேவேளை தனது வீட்டிற்கும் தொலைபேசி அழைப்பினை ஏற்ப்படுத்தி தான் வவுனியாவிற்கு வருவதாக கூறியுள்ளார்.எனினும் அதன் பின்னர் அவருடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்கள் கடந்தும் குறித்த இளைஞர் வீட்டிற்கும் வரவில்லை.இதனையடுத்து அவரது தாயாரால் வவுனியா பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் பாலுசுந்தரம் சுதர்சன் வயது 20 என்ற இளைஞரே காணாமல் போயுள்ளார். அவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 0767700438 குறித்த இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்ப்படுத்தி தெரியப்படுத்தியுமாறு அவர்களது குடும்பத்தினரால் கோரப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்
No comments