புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு ஓர் அறிவிப்பு
புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்றைய தினம் (31) ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை விரைவில் வௌியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் L.M.D. தர்மசேன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை ஒரு மாதம் பத்து நாட்களுக்குள் வௌியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார். (Vavuniyan)
No comments