நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறையா? கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்
2021இற்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ள காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் குறித்த கால கட்டத்தில் பாடசாலைகளில் ஆரம்ப தரத்திற்கு விடுமுறை வழங்கப்படமாட்டாது என்றும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் ஆரம்ப தரத்திற்கான கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது பரீட்சை சூழலை பேண முடியாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிபர்கள் வலயக் கல்விப் பணிப்பாளர் ஊடாக மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவிக்க வேண்டும். அத்தகைய பாடசாலைகளின் ஆரம்ப தரங்களுக்கு விடுமுறை வழங்குவதற்கும், உரிய பணிகளுக்கு பரிந்துரை செய்வதற்கும், உரிய காலத்தில் மாற்றுக் கற்றல் முறைகளைப் பின்பற்றுவதற்கும் உள்ளூராட்சி கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்படும்.
மேலும் பரீட்சை கடமைகளுக்கு முன்னுரிமை அளித்து, தேவையான ஆசிரியர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, 2021இற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெப்ரவரி 7 ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. (Vavuniyan)
Post Comment
No comments