Breaking News

வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மாவட்ட அலுவலகம் திறப்பு


தமிழரசுக்கட்சியின் மாவட்ட அலுவலகம் வவுனியாவில் திறப்பு வைக்கப்பட்டது. 

தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகம் முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜாவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன், சிறீதரன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான ரவீகரன், வைத்தியர் ப.சத்தியலிங்கம் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் குறித்த அலுவலகம் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. (VAVUNIYAN) 





No comments