ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல்
குறித்த தாக்குதல் சம்பவம் இன்று (14) அதிகாலை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ளது.
பிலியந்தலை கெம்பீரிஜ் கோர்ட் வீட்டுத் திட்டத்திலுள்ள சமுதித்தவின் வீட்டின் மீது, நான்கு பேரை கொண்ட அடையாளம் தெரியாத குழுவினரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வெள்ளை நிற வான் ஒன்றில் வருகைத்தந்த அடையாளம் தெரியாத சிலர், முதலில் வீட்டுத் திட்டத்திற்குள் பிரவேசிக்கும் நுழைவாயிலில் இருந்த காவலாளியை துப்பாக்கி முனையில் மிரட்டி, பலவந்தமாக வீட்டுத் திட்டத்திற்குள் நுழைந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, வீட்டுத் திட்டத்திற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், சமுதித்தவின் வீட்டின் மீது கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன்போது, துப்பாக்கி பிரயோக சத்தங்களை கேட்கக்கூடியதாக இருந்ததாக சமுதித்த சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த பகுதிக்கு பொலிஸார் விரைந்துள்ளனர்
சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். (Vavuniyan)
No comments