Breaking News

வவுனியா பாரதிபுரம் கிராமத்தில் செல்வம் அடைக்கலநாதனின் மக்கள் சந்திப்பு


வவுனியா பாரதிபுரம் கிராமத்தில் அபிவிருத்தி தொடர்பான மக்கள் சந்திப்பு இன்று காலை இடம்பெற்றிருந்தது.


இதன்போது வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தலைவர் க. யோகராசா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ. மயூரன் மற்றும் உதவி பிரதேச செயலாளர் உட்பட்ட அரச அதிகாரிகளும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில் கிராமத்தின் பல்வேறு தேவைகள் குறித்து இதன்போது கிராம மக்களினால் கோரிக்கைகள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அரச அதிகாரிகளிடம் முன்வைக்கப்பட்டிருந்தது.

உடனடியாக தீர்க்க கூடிய விடயங்கள் மற்றும் அமைச்சு மட்டத்தில் செயற்படுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்த நிலையில் பிரதேச சபையினூடாக செயற்படுத்தும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.(Vavuniyan) 




No comments