Breaking News

தமிழரசுக்கட்சி இளைஞர் அணி உதவிச் செயலாளரை வெள்ளைவானில் கடத்த முயற்சி


இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணியின் உதவிச் செயலாளர் நிதன்சனை கல்முனையில் வைத்து வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அரச புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிக்கொள்ளும் இனந்தெரியாதவர்கள், புகைப்படத்தில் உள்ள வெள்ளை வானில் இலங்கை தமிழ் அரசு கட்சி இளைஞர் அணியின் உதவி செயலாளர் நிதன்ஷனை கடத்த முயன்றுள்ளனர்.

இது தொடர்பில் கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.(Vavuniyan)



No comments