Breaking News

இளம் குடும்பஸ்தர் கொலையா? தீவிர விசாரணையில் காவல்துறையினர்!


மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு, விடத்தல்தீவு பிரதான வீதிக்கு அருகில்  இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சன்னார் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே.பாஸ்கரன் (வயது-33) என்பவரே இவ்வாறு சடலமா மீட்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

உயிரிழந்த நபர், தனது வீட்டில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை  விடத்தல் தீவு கிராமத்திற்குச் சென்று விட்டு மீண்டும் தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

இந்த நிலையிலே குறித்த குடும்பஸ்தர் இன்று திங்கட்கிழமை காலை அப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலத்திற்கு அருகில் இருந்து அவர் பயணித்த மோட்டார் சைக்கிலும் மீட்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற  அடம்பன் காவல்துறையினர் விபத்தா அல்லது கொலையா? என்பது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.(Vavuniyan) 

No comments