Breaking News

வவுனியாவில் திடீரென தீப்பற்றி எரிந்து நாசமாகிய பழக்கடை


வவுனியாவில் திடீரென பழங்கடை ஒன்று தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது.

நேற்று இரவு இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, குருமன்காடு சாந்தி கிளினிக் அருகாமையில் உள்ள பழக்கடை ஒன்றை அதன் உரிமையாளர் வியாபாரம்
முடிந்து பூட்டி விட்டு சென்று சிறிது நேரத்தில் குறித்த பழ வியாபார நிலையத்தில் தீ பிடித்து எரிந்துள்ளது.

பழ வியாபார நிலையம் தீ பிடித்து எரிவதை அவதானித்த அயலவர்கள் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் மற்றும் பொலிசாருக்கு தகவல் வழங்கியதுடன் வியாபார நிலைய உரிமையாளருக்கும் தெரியப்படுத்தினர். 

வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்த போதும் பழ வியாபார நிலையம் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், பழங்களும் தீயில் கருகியுள்ளன.

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

இதேவேளை, அப்பகுதியில் மின்சாரம் நின்று சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின் வந்த போதே குறித்த வர்த்தக நிலையம் தீயில் எரிந்ததை அவதானிக்க முடிந்ததாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.



No comments