Breaking News

கொழும்பிற்குள் பிரவேசிக்கும் பிரதான வீதி ஒன்றின் போக்குவரத்து இன்று முதல் மட்டுப்படுத்தப்படுகின்றது


கொழும்பு − ஹொரணை பிரதான வீதியின் போககுந்தர பாலத்தின் அபிவிருத்தி பணிகள் இன்று (13) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளமையினால், அவ்வீதியுன் ஊடான போக்குவரத்து நடவடிக்கைகள் மறுஅறிவித்தல் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, இவ்வீதியின் ஊடான போக்குவரத்து இன்று காலை 6மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த வீதியின் அபிவிருத்தி பணிகள் இன்று (13) முதல் ஆரம்பிக்கப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை, பொலிஸ் தலைமையகத்திற்கு அறிவித்துள்ளது.

இதன்படி, காலை வேளையில் கொழும்பு திசையை நோக்கி 2 கடவைகளும், ஹொரணையை நோக்கி ஒரு கடவையும், மாலை வேளையில் ஹொரணையை நோக்கி 2 கடவைகளும், கொழும்பை நோக்கி ஒரு கடவையும் போக்குவரத்துக்காக திறக்கப்படவுள்ளது.

அதேபோன்று, காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பஸ்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாரவூர்திகளும், இந்த வீதியூடாக பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப் பகுதியில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு, பொலிஸார் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். (Vavuniyan) 

No comments