Breaking News

அடுத்தவாரம் அமைச்சரவைக்கு வரவுள்ள அறிவிப்பு


நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது குறித்து அடுத்தவாரம் அமைச்சரவைக்கு அறிவிக்கவுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச (Basilrajabaksha) குறிப்பிட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தினால் தற்போதுவரை நிதியுதவியை வழங்குமாறு எவ்வித கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை என்று சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களப் பணிப்பாளர் கெரிரைஸ் தெரிவித்திருந்தார்.

தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்திடம் தொழில்நுட்ப ரீதியான ஆதரவைக் கோரியிருப்பதாகவும் அதற்கிணங்க நிபுணர்குழு ஒன்று விரைவில் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாகவும் அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

நிதியமைச்சர் பசில் ராஜபக்சவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக நிதியமைச்சில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள பேரண்ட நிதிப்பிரிவின் இயலுமையை வலுப்படுத்துவதற்கு அவசியமான பயிற்சிகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு உடன்பட்டிருந்ததோடு அந்தப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொழும்பிலுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு நான்காவது மீளாய்வுப் பணிகளைப் பூர்த்திசெய்திருப்பதாகவும் அதுகுறித்து சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையில் கலந்துரையாடப்படும் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் கெரி ரைஸ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், சர்வதேச நாணய நிதியத்தின் இந்த அறிவிப்பு தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

நிதி அமைச்சர் சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார். (Vavuniyan) 

No comments