அமைச்சர்களுக்கு பேரிடியாய் வந்த செய்தி - முடுக்கி விடப்பட்டுள்ள புலனாய்வுத்துறை
அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டாலோ அல்லது அவற்றைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டாலோ சம்பந்தப்பட்ட அமைச்சரை பதவியில் இருந்து நீக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதுபோன்ற 34 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களின் உறவினர்கள் மற்றும் மகள்கள் அரசு வாகனங்கள் அல்லது பிற சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசாங்க புலனாய்வுப் பிரிவினரிடம் ஏற்கனவே கேட்கப்பட்டுள்ளது.
இதன்படி அரச சொத்துக்களை உத்தியோகபூர்வமற்ற முறையில் துஷ்பிரயோகம் செய்வது உறுதி செய்யப்பட்டால் முதலில் இது குறித்த அமைச்சருக்கு தெரியப்படுத்தவும் பின்னர் அவரை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.(Vavuniyan)
No comments