ஒரு மாகாணத்திற்கு மாத்திரம் நாளை மின்வெட்டு
இலங்கையின், தென் மாகாணத்திற்கு மாத்திரம் நாளைய தினம் (21) ஒன்று அல்லது ஒன்றரை மணித்தியாலங்களுக்கு மின்சார விநியோக தடை செய்யவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
தேவையான அளவு எரிபொருள் கிடைத்துள்ளமையினால், ஏனைய பகுதிகளுக்கு மின்சார விநியோகம் தடை செய்யப்படாது என்று ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவிக்கின்றார். (Vavuniyan)
No comments