பாகிஸ்தானில் மற்றுமொருவர் அடித்து கொலை - மத நிந்தனை என குற்றச்சாட்டு (PHOTOS)
பஞ்ஜாப் − பானேவால் பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில், கொலை செய்யப்பட்ட நபர் கடத்தப்பட்டுள்ளார்.
இவ்வாறு கடத்தப்பட்ட நபர், லாகூரிலிருந்து சுமார் 275 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ஒரு இடத்திலேயே அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவரின் சடலம், மரமொன்றில் தொங்கிய நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அன்னாரது இறுதிக் கிரியைகள் நேற்று இடம்பெற்றுள்ளன.
குறித்த நபரை காப்பாற்ற முன்வராத பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில், அந்த நாட்டு பிரதமர் இம்ரான் கான் அறிக்கை ஒன்றை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.(Vavuniyan)
No comments