Breaking News

பலரையும் சோகத்திற்குள்ளாக்கிய ஆசிரியரின் மரணம்! மகளின் உருக்கமான கடிதம் வெளியானது (Photo)


நுவரெலியா - ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான வீதியில் 200 வருடங்கள் பழமையான ஆல மரக்கிளையொன்று விழுந்து உயிரிழந்த ஆசிரியரின் உடல் பெரும்பாலானோரின் கண்ணீருக்கு மத்தியில் நேற்றையதினம் அடக்கம் செய்யப்பட்டது.

இதன்போது, அவரின் உடலை தாங்கிய பேழையில் அவரது மகள் எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

“எனது அன்புள்ள அப்பா, நீங்கள் இல்லாமையை நான் உணர்கின்றேன். நான் புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த சித்தியைப் பெறுவேன் என உங்கள் மீது சத்தியம் செய்கின்றேன்” என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த விபத்தில் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் கற்பிக்கும் வே.மகேஸ்வரன் என்ற 39 வயதான ஆசிரியர் உயிரிழந்திருந்தார்.

இச்சம்பவத்திற்கு நீதி கோரி பிரதேச மக்கள் வீதி மறியல் போராட்டம் ஒன்றையும் சம்பவதினத்தன்று முன்னெடுத்திருந்தனர்.

எனினும் பொலிஸார் வழங்கிய உறுதிமொழிக்கமைய மேற்படி போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டிருந்தது.

தலவாக்கலை பிள்ளையார் ஆலய பகுதியில் அமைந்துள்ள மரத்தை அகற்றும் சந்தர்ப்பத்தில், வீதி தடைகள் எதுவும் தகுந்த முறையில் இடவில்லை எனவும், குறித்த மரத்தை வெட்டுவதற்கு யார் அனுமதி வழங்கியது எனவும் கோரி, பிரதேசவாசிகள் தொடர்ந்தும் முரண்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. (Vavuniyan)




No comments