Breaking News

புதுவிதமாக தயாரித்த கைக்கடிகாரம் - இலங்கையரின் புதிய தயாரிப்பு (PHOTOS)


தேங்காய் சிரட்டையில் மூலம் கைக்கடிகாரம் தயாரிக்கும் ஒருவர் தொடர்பான செய்தி தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.

அம்பலந்தோட்டை − கிவுல மிணிஎதிலிய பகுதியைச் சேர்ந்த தளபாட தயாரிப்பாளரான R.P.ஷமிந்து குமார என்பவரே, இவ்வாறு சிரட்டையில் கைக்கடிகாரத்தை தயாரித்துள்ளார்.

குறித்த கைக்கடிகாரத்திலுள்ள இயந்திரத்தை தவிர, ஏனைய பகுதிகள் அனைத்தும் சிரட்டையில் தயாரிக்கப்பட்டுள்ளன.

இயந்திரத்தில் ஏதேனும் கோளாறு ஏற்படும் பட்சத்தில், இயந்திரத்தை மாற்றிக்கொள்ளும் விதத்திலேயே குறித்த கைக்கடிகாரம் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Vavuniyan)




No comments