இலங்கையில் டிக் டொக் (TICTOK) தடைப்படுமா
சமூக வலைத்தளங்களை ஒழுங்குப்படுத்துவதற்கான காலம் எழுந்துள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிக்கின்றார்.
சமூக வலைத்தளங்களின் ஊடாக கலாசாரம், இனம் மற்றும் சமூக ரீதியில் ஏற்படுகின்ற பிரச்சினைகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என்றி அவர் கூறுகின்றார்.
டிக் டொக் (TICTOK) சமூக வலைத்தளத்தின் ஊடாக சமூகத்தில் தற்போது பேரழிவு ஏற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்
இது குறித்து அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் கூறுகின்றார்.
சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என தான் கூறவில்லை என்று குறிப்பிட்ட அவர், சமூக வலைத்தளங்களை ஒழுங்குப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். (Vavuniyan)
No comments