Breaking News

வவுனியா கூமாங்குளத்தில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான முதிரை குற்றிகள் மீட்பு


வவுனியா கூமாங்குளத்தில் சுமார்  10 இலட்சம் ரூபா பெறுமதியான முதிரை மரக்குற்றிகள் மீட்கப்பட்டதாக பண்டாரிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.


வவுனியா பண்டாரிக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கமைய கூமாங்குளத்தில் உள்ள வெற்றுக்காணியில் இருந்தே 18 மரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதியினை சேர்ந்த 32வயதுடைய ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
 
குறித்த மரக்குற்றிகள் மடுவில் இருந்து சட்டவிரோதமான முறையிலே வெட்டப்பட்டு காட்டுப்பகுதியின் ஊடாக கடத்தபட்டு வவுனியா கூமாங்குளம் பகுதியில் உள்ள வெற்றுக்காணிக்கு கொண்டுவரப்பட்டதாகவும்  பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை பண்டாரிக்குளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.(Vavuniyan)


No comments