13 பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் பதிவு
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த வருடம் 13 பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் மாவட்ட பெண்கள் அபிவிருத்தி திணைக்களத்திற்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் பொதுப்போக்குவரத்து பேருந்துகளில் பெண்களுக்கு இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களை இல்லாதொழிப்பதற்கான விழிப்புணர்வு செயற்பாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.(Vavuniyan)
No comments