Breaking News

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலை மாணவர்களின் 27 ஆவது கலைவிழா


வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலை மாணவர்களின் 27 ஆவது கலைவிழா நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு சுத்தானந்த இந்து இளைஞர் சங்க செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார். 

குறித்த நிகழ்வானது எதிர்வரும் 26 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு சங்கத்தின் தலைவர் வைத்தியர் ப.சத்தியநாதன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. 

இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக, வவுனியா வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி. அன்னமலர் சுரேந்திரன், சிறப்பு விருந்தினராக, முன்பள்ளி உதவிக்கல்வி பணிப்பாளர் வீரவாகு பரஞ்சோதி, கௌரவ விருந்தினராக, திருமதி. கமலாதேவி குமாரதாஸ் போன்றோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

எனவே ஆட்சிமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இவ்விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments