Breaking News

நாமலுக்குகு எதிரான வழக்கு ஏப்ரலில் விசாரணை


அமைச்சர் நாமல் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை அடுத்த மாதம் 05 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (10) தீர்மானித்தது.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட பிரதிவாதிகள் ஐவர் மற்றும் Corporate services நிறுவனத்திற்கு எதிராக சட்டமா அதிபரினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் நாமல் ராஜபக்ஸ, பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட காலப்பகுதியில் அவருக்கு சொந்தமான Corporate services நிறுவனம் வேறு நிறுவனமொன்றுடன் இணைந்து முன்னெடுத்த கொடுக்கல் வாங்கலின் போது சட்டவிரோதமாக 30 மில்லியன் ரூபா பணத்தை சம்பாதித்தமையூடாக, நிதி தூய்தாக்கல் சட்டத்தின் பிரகாரம் தவறிழைத்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதேவேளை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட பிரதிவாதிகள் இன்று நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

No comments