எரிபொருள் தொடர்பாக வெளியான முக்கிய அறிவித்தல்
இலங்கைக்கு வந்துள்ள 37,500 தொன் டீசல் ஏற்றிய கப்பலில் இருந்து திட்டமிட்டபடி டீசலை தரையிறக்க முடியவில்லை என்று பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்றும் நாளை டீசல் கொள்வனவு செய்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
எனினும் அத்தியாவசிய சேவைகளுக்கு தேவையான டீசல் தொடர்ந்தும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
பெற்றோல் விநியோகம் வழமை போன்று தட்டுப்பாடு இன்றி மேற்கொள்ளப்படும் என கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது. (Vavuniyan)
No comments