Breaking News

மனைவியின் ஆசையை நிறைவேற்ற முயன்ற கணவனுக்கு ஏற்பட்ட பரிதாபநிலை


மனைவியின் ஆசையை நிறைவேற்ற முயன்ற கணவனை கொலை செய்த சம்பவம் ஒன்று எம்பிலிபிட்டி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 

எல்பிட்டிய, பிட்டுவல வீதியின் 2ஆம் தூண் பகுதியில் வசிக்கும் 34 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவதினமன்று கர்ப்பிணி மனைவியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக தனது மாமாவின் காணியில் இருந்த பலா மரத்தில் ஏறி பலாக்காய் பறித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அப்போது மாமாவுடன் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறிய நிலையிலேயே மாமாவினால் குறித்த நபரை கத்தியால் குத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

படுகாயமடைந்த நபர் எல்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.  மாமா சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.(Vavuniyan) 

No comments