Breaking News

வவுனியாவில் கலாசார மத்திய நிலையம் திறந்து வைப்பு


வவுனியாவில் கலாசார மத்திய நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா ஓமந்தை அரச வீட்டுத்திட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கலாசார மத்திய நிலையம் இன்று தேசிய மரபுரிமைகள் அருங்கலைகள் மற்றும் மேம்பாட்டு அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயகவினால் திறந்து வைக்கப்பட்டது.

2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த கட்டிடம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்படாது காணப்பட்ட நிலையில் குறித்த கட்டிடத்தினை வவுனியா கலைஞர்கள் திறந்து வைக்க வேண்டும் என கடந்து 3 மாதங்களுக்கு முன் அமைச்சரிடம் வைத்த கோரிக்கைக்கு அமைய குறித்த கட்டிடம் இன்று திறந்து வைக்கப்பட்டிருந்தது.

இதன் போது அமைச்சர் விதுர விக்ரமநாயக வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் கே.கே.மஸ்தான், கு.திலீபன் வவுனியா மாவட்ட கலைஞர்கள் உட்பட அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். (Vavuniyan)







No comments