தனியார் கல்வி நிலையம் சென்ற மாணவன் மாயம்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தனியார் கல்வி நிலையம் சென்ற வள்ளிபுனம் பகுதியை சேர்ந்த மாணவன் இனந்தெரியாத வானில் கடத்தி செல்லப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த மாணவனை வனப்பகுதி ஒன்றுக்கு கொண்டு செல்ல முற்பட்டபோது வானில் இருந்து தப்பி ஓடிய நிலையில் அடிகாயங்களுடன் உறவினர்களால் மீட்கப்பட்டு புதுக்குடியிருப்பு வைத்திய சாலையில் சேர்த்துள்ளனர்.
இவர் கடத்தி செல்லப்பட்ட வானுக்குள் மேலும் இரண்டு சிறுவர்கள் கை,கால்,கட்டப்பட்டு வாய்க்கு பிளாஸ்ரர் ஒட்டப்பட்டநிலையில் இருந்ததாக, தப்பித்த மாணவன் தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதன் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (Vavuniyan)
No comments