பாடசாலை மாணவன் கைது
எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகேவின் சாரதி, பிலியந்தலை கம்மனவத்தை பிரதேசத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கல்கிசை குற்றத் தடுப்பு புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொரலஸ்கமுவ பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தன்று குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்திற்கு சென்றிருந்த நிலையில் கொலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (Vavuniyan)
No comments