ஆற்றில் அடித்துச் சென்று உயிரிழந்த மாணவன் (நேரடி வீடியோ)
கம்பஹா – தரளுவ பகுதியிலுள்ள ஆற்றில் அடித்துச்சென்று மாணவன் ஒருவன் பலியாகியுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (14) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீரகுல பகுதியைச் சேர்ந்த 16 வயதான இளைஞனே இவ்வாறு பலியாகியுள்ளார்.
குறித்த மாணவன் பாடசாலைக்கு செல்வதாக பெற்றோருக்கு தெரிவித்து, நண்பர்களுடன் வெளியில் சென்றுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நண்பர்கள் ஆற்றில் நீராடச் சென்ற வேளையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் நண்பன் ஒருவனினால் தனது தொலைபேசியில் பதிவு செய்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது. (Vavuniyan)
No comments