Breaking News

வவுனியா, தரணிக்குளத்தில் மழலைகளிற்கான மாலை நேர பாடசாலை ஆரம்பம்


வவுனியா, தரணிக்குளத்தில் மழலைகளிற்கான மாலை நேர பாடசாலை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வவனியா தரணிக்குளம் கிராமத்தின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் முகமாக இன்றைதினம் மழலைகளிற்கான மாலை நேர பாடசாலையினை பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செ.கஜேந்திரனால் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.

குறித்த மழலைகளிற்கான மாலை நேர பாடசாலையானது தரணிக்குளம் அறநெறிப்பாடசாலை மண்டபத்திலேயே இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். (Vavuniyan)




 

No comments