ரணில் பிரதமராகின்றாரா? − நிலைப்பாட்டை அறிவித்தது பொதுஜன பெரமுன
கொழும்பில் இன்று (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய அந்த கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பிரதமர் பதவியை வகிக்கக்கூடிய தகுதியான ஒருவர், தற்போது அந்த பதவியை வகிக்கும் போது, எதற்காக வேறொரு நபருக்கு அந்த பதவியை வழங்க வேண்டும் என அவர் கூறுகின்றார்.
இதேவவேளை, தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் எண்ணமும் தமக்கு கிடையாது என அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த தெரிவிக்கின்றார்.
ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பல ஊடகங்களில் இன்று செய்தி வெளியான பின்னணியிலேயே, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. (Vavuniyan)
No comments