Breaking News

நீலங்களின் சமர் கிரிக்கெட் சுற்றுப்போட்டி - இரண்டாவது போட்டியிலும் வென்ற ஐயனார் விளையாட்டு கழகம்


நீலங்களின் சமர் சுற்றுப்போட்டியின் இரண்டாவது போட்டி நேற்று நகரசபை மைதானத்தில் இடம்பெற்றது.

ஐயனார் விளையாட்டு கழகத்திற்கும் ஸ்ரார் பைட் விளையாட்டு கழகத்திற்கும் இடையில் குறித்த போட்டி இடம்பெற்றிருந்தது.

இதன்போது முதலில் துடுப்பெடுத்தாடிய ஐயனார் விளையாட்டு கழகம் 32.02 ஒவர்களிற்கு முகம்கொடுத்து சகல விக்கெட்களையும் இழந்து 155 ரன்களை பெற்றுக்கொண்டது. 

துடுப்பாட்டத்தில் ந. நிசாந்தன் 03 பவுன்டரிகள் அடங்கலாக 39 ரன்களையும், க.அனுசன் 02 சிக்ஸ், 03 பவுன்டரிகள் அடங்கலாக 31 ரன்களையும், ஜெ. கயூரன் 02 சிக்ஸ், 03 பவுன்டரிகள் அடங்கலாக 29 ரன்களையும் பெற்றுக்கொண்டனர். 

156 ரன்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய ஸ்ரார் பைட் விளையாட்டு கழகம் 28.02 ஓவர்களிற்கு மாத்திரம் முகம் கொடுத்து 79 ரன்களிற்கு தனது சகல விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவிக்கொண்டது.

நீலங்களின் சமர் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இரண்டு வெற்றிகளை பெற்று ஐயனார் விளையாட்டு கழகம் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. (Vavuniyan) 

No comments