வாசுதேவ நாணயக்கார எடுத்த அதிரடி தீர்மானம்
எனினும், அமைச்சரவைக்குப் போகவும் மாட்டேன், எனது அமைச்சுப் பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்றவும் மாட்டேன் என்றும் குறிப்பிட்டார்.
இன்று (4) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.
உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரின் அமைச்சுப் பதவிகளில் இருந்து அவர்களை நீக்கி அரசாங்கம் பாரிய தவறை இழைத்துள்ளது.
வீரவன்ச மற்றும் கம்மன்பிலவுக்கு நீதி கிடைக்கும் வரை தாம் அமைச்சராக செயற்பட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் நேற்று (3) மாலை முதல் அமுலுக்கு வரும் வகையில் அவர்களின் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (Vavuniyan)
No comments