Breaking News

வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு புதிய உறுப்பினர் நியமனம்


வவுனியா வடக்கு பிரதேசசபைக்கு புதிய உறுப்பினராக திருமதி ஜெயகரன் ரஞ்சினி இன்றையதினம் நியமிக்கப்பட்டுள்ளார். 

நெடுங்கேணி பிரதேச சபை உறுப்பினராக இருந்த கனகராயன்குளத்தினை சேர்ந்த முதலாம்  வட்டார வேட்பாளர் ச.தணிகாசலம் தனது பதவியை ராஜினாமா செய்து விகிதாசார வேட்பாளருக்கு இடம் கொடுத்ததனால் குறித்த பதவிக்கு புதிய உறுப்பினர் நியமிக்கப்பட்டுள்ளார். 

குறித்த நியமனத்தினை அகில இலங்கை சமாதான நீதவான் திருக்கேதீஸ்வரன் முன்னிலையில் சத்தியப் பிரமாண நிகழ்வு நடைபெற்று அதற்கான நியமன கடிதத்தை வவுனியா மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் அமைப்பாளர்  ந. கருணாநிதியால் குறித்த பதவிக்கு புதிய உறுப்பினராக  நியமிக்கப்பட்ட திருமதி ஜெயகரன் ரஞ்சினிக்கு  வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

No comments