உக்ரைன் இராணுவ தளத்தை நிர்மூலமாக்கியது ரஷ்ய ஏவுகணை
போலந்து எல்லைக்கு அருகில், உக்ரைன் இராணுவ தளத்தின் மீது ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் குறித்த இராணுவ தளம் முற்றாக நிர்மூலமாகியது.
உக்ரைனிலிருந்து போலந்துக்கு தப்பிச் செல்ல மக்களால் பயன்படுத்தப்படும் பகுதியில் அமைந்துள்ள இராணுவ தளத்தின் மீதே தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
லீவிவ் நகருக்கு வெளியில் உள்ள இராணுவ தளத்தில் ரஷ்யா 30 ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளதாக உள்ளூர் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடந்தப்பட்ட பல மணி நேரங்களுக்கு பின்னர் அவசர ஊர்திகள் சம்பவ இடத்திற்கு தொடர்ந்து செல்கிறது. அதிகாரிகள் அங்கே விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (Vavuniyan)
No comments